மகாராஷ்டிர மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறாத காரணத்தால் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக மகாராஷ்டிர மாநில பள்ளிக்கல்வித்துறை சனிக்கிழமை அறிவித்தது.
அதேசமயம் இதர வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


