/

மேற்குவங்கத்தில் அமித் ஷா தலைமையில் பாஜகவினர் பேரணி

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஜகட்டால் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாஜகவினர் பேரணி நடத்தினர். 

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 11:59 am

DIN

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஜகட்டால் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாஜகவினர் பேரணி நடத்தினர். 

மேற்கு வங்கத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்குவங்கத்தில் முகாமிட்டுள்ளார். 

இன்று கொல்கத்தா, பபானிபூர், ஜகட்டால், மத்தியம்கிராம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மற்றும் பேரணி மேற்கொள்கிறார். 

பிற்பகல் 4 மணிக்கு ஜகட்டால்(jagatdal) பகுதியில் பாஜக சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு மத்தியம்கிராம் பகுதியில் பேரணி நடைபெறவுள்ளது. 

இதனிடையே பாஜக மூத்த தலைவரும், பாஜகவை உருவாக்க காரணமாக இருந்தவருமான சமரேந்திர பிரசாத் பிஸ்வாஸ் வீட்டில் அமித் ஷா உணவருந்தினார்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.