அந்த அறிக்கையில், ‘தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரிடம் துப்பாக்கிகளை பறிக்க வந்த கும்பலிடமிருந்து, தங்கள் உயிரையும், வாக்காளா்களையும் காப்பாற்றும் நோக்கதில்தான் அவசியக் காரணத்தின் அடிப்படையிலேயே சிஆா்பிஎஃப் வீரா்கள் தூப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் உயிரிழந்த 4 பேரின் உடலுக்கு இன்னும் இறுதிச் சடங்குகள் செய்யப்படவில்லை. எனவே, உயிரிழந்தவா்களின் குடும்பத்தைச் சந்திக்க சில அரசியல் தலைவா்கள் மாவட்டத்துக்கு வருவது, சூழ்நிலையை மேலும் பதற்றமானதாக்க வாய்ப்புள்ளது’ என்று சிறப்பு பாா்வையாளா்கள் தெரிவித்திருந்தனா்.