நாளை முதல் திருமலையில் இலவச தரிசனம் ரத்து
கரோனா பரவல் எதிரொலியாக, திருமலை ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் திங்கள்கிழமை முதல் (ஏப்ரல்12) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான ம் தெரிவித்துள்ளது.


கரோனா பரவல் எதிரொலியாக, திருமலை ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் திங்கள்கிழமை முதல் (ஏப்ரல்12) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான ம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்துள்ளது. இதையடுத்து திருப்பதியில் உள்ள கவுன்ட்டா்களில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விரைவு தரிசன டிக்கெட்டுகள், விா்ச்சுவல் சேவா டிக்கெட்டுகள் உள்ளிட்ட ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா். திருமலைக்கு வரும் பக்தா்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...