ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதில் உடன்பாடு இல்லை: கேஜரிவால்

கரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்புகளை நீக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
முதல்வர் அரவிந்த் கேஜரிவால்  (கோப்புப்படம்)
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)

ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, எனினும் வேறு வழியில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

தில்லியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜரிவால், 

கரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்புகளை நீக்குவது குறித்து நான் பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக வீடு வீடாக பிரசாரம் செய்ய தில்லி அரசு தயாராக உள்ளது. 

தில்லியில் 65% நோயாளிகள் 35 வயதுக்கு குறைவானவர்கள். மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு முன்பு செயலியின் மூலமாக படுக்கைகள் உள்ளனவா என்று சரிபார்த்துச் செல்லுங்கள். 

ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், மருத்துவ வசதி. படுக்கைகள் பற்றாக்குறை, தடுப்பூசிகள் பற்றாக்குறையால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com