மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் அதானி குழுமம்!

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட், அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

News image
Updated On :12 ஏப்ரல் 2021, 5:36 am

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட் அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதற்காக திங்களன்று அதானி குழுமத்துடன் ஃபிளிப்கார்ட் நிறுவனம் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும்  வேகமாக அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் திறனை மேம்படுத்தவும் ஃபிளிப்கார்ட் நிறுவனம், அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் உடன் இணைந்து செயல்படவுள்ளது. 

மேலும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது மூன்றாவது தரவு மையத்தை சென்னையில் நிறுவ உள்ளது. முக்கிய நகரங்களில் பொருள்களை விரைந்து டெலிவரி செய்ய இரு பெரிய நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. 

மும்பையில் 5,34,000 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் லாஜிஸ்டிக்ஸ் கட்டடம் ஃபிளிப்கார்ட்டின் சேவைக்கு ஒதுக்கப்படவுள்ளது. மேலும் இது 2022 மூன்றாம் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும். சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களின் பொருள்களை ஒரேநேரத்தில் இங்கு சேமித்து வைக்க முடியும். 

இதன் மூலமாக 2,500 பேருக்கு நேரடியாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.