ஊழியர்கள் பலருக்கு கரோனா: வழக்குகளை காணொலியில் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ஊழியர்கள் பலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து வழக்குகளை இன்று காணொலியில் வாயிலாக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.  
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஊழியர்கள் பலருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து வழக்குகளை இன்று காணொலியில் வாயிலாக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. 
இந்தியாவில் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் 1.68 லட்சம் பேருக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
தினசரி கரோனா பாதிப்புகளில் புதிதாக, மகாராஷ்டிரத்தில் 55,411 பேரும், சத்தீஸ்கரில் 14,098 பேரும், உத்தர பிரதேசத்தில் 12,748 பேரும் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பல ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து வழக்குகளை இன்று வீட்டிலிருந்து காணொலி மூலம் விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். ஊழியர்கள் பலருக்கு கரோனா ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com