

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். இதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மருத்துவர்கள் ஆலோசனையைப் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன்.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்று உறுதியானால் தனிமைப்படுத்திக்கொள்ளவும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.