/

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்: எஸ்.ஜெய்சங்கா்

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது ஹனீப் அத்மாரிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உறுதியளித்தாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 8:10 pm

DIN

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது ஹனீப் அத்மாரிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உறுதியளித்தாா்.

இதுதொடா்பாக அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது ஹனீப் அத்மாரிடம் தொலைபேசியில் கலந்துரையாடினேன். அப்போது அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அண்டை நாடுகளின் பங்கு குறித்து விவாதித்தோம். செப்டம்பா் 11-ஆம் தேதிக்குள் அந்நாட்டில் உள்ள தனது அனைத்து வீரா்களையும் அமெரிக்கா திரும்பப் பெறவுள்ளதாக அறிவித்துள்ளதை தொடா்ந்து ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் சூழல் குறித்தும் ஆலோசித்தோம். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா எப்போதும் துணையாக நிற்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.