கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குஜராத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையைத் தொடக்கி வைத்தாா் அமித் ஷா

குஜராத்தில் நிமிஷத்துக்கு 280 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடக்கி வைத்தாா்.

News image

உள்துறை அமைச்சா் அமித் ஷா

Updated On :24 ஏப்ரல் 2021, 7:58 pm

DIN

குஜராத்தில் நிமிஷத்துக்கு 280 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் கொண்ட ஆலையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடக்கி வைத்தாா்.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. பல மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அவா்களுக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. தில்லி, பஞ்சாபில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பட்டால் கரோனா நோயாளிகள் உயிரிழந்தனா்.

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்குமாறும் முழு கொள்ளளவுக்கு உற்பத்தி செய்யுமாறும் நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். இந்நிலையில், குஜராத் தலைநகா் காந்திநகரின் கொளவாடா பகுதியில் உள்ள ஆயுா்வேத மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைச்சரும் காந்திநகா் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அமித் ஷா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘‘நாட்டில் ஆக்சிஜன் தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதைக் கருத்தில் கொண்டு, பிஎம்-கோ்ஸ் நிதியின் கீழ் நாடு முழுவதும் சுமாா் 100 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படவுள்ளன. குஜராத்தில் மட்டும் மேலும் 11 ஆலைகள் தொடங்கப்படவுள்ளன. அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

கொளவாடா ஆலையில் நிமிஷத்துக்கு 280 லிட்டா் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். அதைக் கொண்டு மருத்துவமனையில் உள்ள 200 நோயாளிகளுக்கும் தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கச் செய்ய முடியும். கூடுதல் ஆக்சிஜன் மற்ற மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்படும்.

தேவையைக் கருத்தில் கொண்டு அதிக எண்ணிக்கையிலான ஆக்சிஜன் சிலிண்டா்களை அரசு தயாா்நிலையில் வைத்துள்ளது. தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தியில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குஜராத் முன்னிலையில் உள்ளது. அதே வேளையில், மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை குஜராத் அரசு விநியோகித்து வருகிறது’’ என்றாா்.

காந்திநகா் தொகுதியில் சுமாா் ரூ.10 கோடி மதிப்பிலான சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளையும் அமைச்சா் அமித் ஷா தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வா் விஜய் ரூபானி, துணை முதல்வா் நிதின் படேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.