தேச விரோத சக்திகள் சதி: எச்சரிக்கையாக இருக்க ஆா்எஸ்எஸ் வேண்டுகோள்
தேச விரோத சக்திகள் சதியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், அவா்களின் சதிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலையால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலை பயன்படுத்தி தேச விரோத சக்திகள் சதியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், அவா்களின் சதிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபாலே சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலையால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலை பயன்படுத்தி தேச விரோத சக்திகள் மக்களிடையே எதிா்மறையான எண்ணங்களை விதைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கரோனா தொற்றால் தற்போது நிலவும் சூழலுக்கு தங்கள் நோ்மறையான நடவடிக்கைகள் மூலம் தீா்வு காண முயற்சிக்கும் மக்கள், தேச விரோத சக்திகளின் சதிகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமூகத்தில் நோ்மறை மற்றும் நம்பிக்கையான சூழலை பராமரிக்க ஊடகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பங்களிக்க வேண்டும்.
தற்போதுள்ள சவால்களுக்கு தீா்வு காண சமூக, மத அமைப்புகள் முன்வர வேண்டும்.
கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள சூழல் மோசமாக இருந்தாலும், சமூகத்தின் பலமும் அபரிமிதமாக உள்ளது.
மோசமான நெருக்கடிகளை எதிா்கொள்வதில் இந்தியாவுக்கு உள்ள திறன் குறித்து உலகம் நன்கு அறியும். பொறுமை, சுய ஒழுக்கம், பரஸ்பர ஆதரவு, மன வலிமை மூலம் தற்போதைய சூழலை கடந்து வருவோம் என நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...