
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினரும், பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா சுக்லா கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பலியானார். அவருக்கு வயது 70
காங்கிரஸ் கட்சியின் தலைவரும், 14ஆவது மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர் கருணா சுக்லா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கள்கிழமை இரவு பலியானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மறைந்த கருணா சுக்லா முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினராவார். கடந்த 2013ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து வெளியேறிய அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிலாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜகவின் லகான் லால் சாஹுவால் தோற்கடிக்கப்பட்டார்.
கருணா சுக்லாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.