கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கையிருப்பில் ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள்: மத்திய அரசு

ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2021, 11:20 am

DIN


ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த மூன்று நாள்களில் 57 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்காக மத்திய அரசு 15.95 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளது. இதில் விரயமான தடுப்பு மருந்து போக 14.89 கோடி தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் கரோனா தடுப்பு மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தடுப்பு மருந்துகள் இல்லாததால், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆனால் ஏப்ரல் 28-ம் தேதி வரை மகாராஷ்டிர அரசுக்கு 1.5 கோடி கரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 0.22 சதவிகிதம் விரயமானது உள்பட இதுவரை 1.53 கோடி தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்காக மீதம் 5.06 லட்சம் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

தில்லிக்கு 36.90 லட்சம் கரோனா தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 32.43 லட்சம் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 1.37 கோடி கரோனா தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விரயமாக்கப்பட்டது உள்பட 1.25 லட்சம் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.