ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஜம்மு-காஷ்மீா்:லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:49 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘‘சந்தாஜி வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். அவா்களுக்கு பாதுகாப்புப் படையினா் தக்க பதிலடி அளித்தனா்.

இந்த மோதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த பாபா் அலி என்பவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். இவா் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உகாடா மாவட்டத்தைச் சோ்ந்தவா்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் இருந்து ஒரு ஏகே ரக துப்பாக்கி, 40 துப்பாக்கி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன’’ என்று தெரிவித்தாா்.

10 பயங்கரவாதிகள் பட்டியல்: ஜம்மு-காஷ்மீரில் முக்கிய பயங்கரவாதிகள் 10 பேரை குறிவைத்துள்ளதாக காஷ்மீா் போலீஸாா் தெரிவித்துள்ளனா். அந்த பயங்கரவாதிகளின் பெயா் பட்டியலை சுட்டுரையில் திங்கள்கிழமை இரவு போலீஸாா் வெளியிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.