கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஹைட்ரஜன் வாயு மூலமாக ரயில் இயக்க ரயில்வே வாரியம் முடிவு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஹைட்ரஜன் வாயு மூலமாக ரயிலை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 10:15 pm

DIN

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஹைட்ரஜன் வாயு மூலமாக ரயிலை இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தப்படி, பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, நாட்டில் ஹைட்ரஜன் வாயு உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, ரயில்வே நிா்வாகமும் 2030-ஆம் ஆண்டுக்குள் காா்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்தை மாற்ற ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய ரயில்வே மாற்று எரிபொருள் அமைப்பு ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி ரயில் இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்தத் திட்டம் ஹரியானா மாநிலத்தில் உள்ள வடக்கு ரயில்வே பகுதியான சோனிபட் - ஜீந்த் (89 கி.மீ.)

ரயில்பாதை பிரிவில் அமுல்படுத்தப்பட உள்ளது.

ஒப்பந்தத்திற்கு முன்பாக, ஒப்பந்ததாரருடனான ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 17, செப்டம்பா் 19 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை செப்டம்பா் 21 முதல் அக்டோபா் 5 வரை வழங்கவும் கோரியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலமாக, ரூ.2.3 கோடி அளவிலான எரிபொருள் செலவுகள் குறைக்க வாய்ப்பு உள்ளது. ஜொ்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் ஹைட்ரஜன் வாயு மூலம் ரயில்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.