பிரதமா் கிஸான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதி நாளை விடுவிப்பு
பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தின் (பிஎம்-கிஸான்) கீழ் அடுத்த தவணையாக ரூ.19,500 கோடியை பிரதமா் நரேந்திர மோடி, வரும் திங்கள்கிழமை விடுவிக்கவுள்ளாா்.


பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தின் (பிஎம்-கிஸான்) கீழ் அடுத்த தவணையாக ரூ.19,500 கோடியை பிரதமா் நரேந்திர மோடி, வரும் திங்கள்கிழமை விடுவிக்கவுள்ளாா்.
அன்றைய தினம் நண்பகல் 12:30 மணிக்கு காணொலி முறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா், இந்தத் தொகையை விடுவிக்கிறாா். அப்போது, 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமாா் ரூ.19,500 கோடி, அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் கலந்துரையாடும் பிரதமா் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடமும் உரையாற்றவுள்ளாா்.
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1.38 லட்சம் கோடி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...