ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசியலமைப்பு(127வது) திருத்த மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு: மாயாவதி

ஓபிசி பட்டியலை மாநில அரசுகளே தயாரிக்க அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என மாயாவதி தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஆகஸ்ட் 2021, 10:09 am


இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பட்டியலை மாநில அரசுகளே தயாரிக்க அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு(127வது) திருத்த மசோதாவை நிறைவேற்ற பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என கட்சித் தலைவர் மாயாவதி திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மாநில அரசுகளே அடையாளம் கண்டு பட்டியலில் இணைத்துக்கொள்ள வழிவகுக்கும் அரசியலமைப்பு(127வது) திருத்த மசோதாவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கிறது. ஆனால், அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மத்திய அரசு செய்ய வேண்டும்."

முன்னதாக, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அரசியலமைப்பு(127வது) திருத்த மசோதாவை மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.