கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23-ஆக உயா்வு

ஹிமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 10:27 am

DIN

ஹிமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 11-ஆம் தேதி ஹிமாசல பிரதேச மாநிலம் கின்னெளா் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அரசுப் பேருந்து மற்றும் மேலும் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டன. அன்றைய தினம் நடைபெற்ற மீட்புப் பணிகளில் 10 போ் சடலங்களாகவும், 13 போ் உயிருடனும் மீட்கப்பட்டனா். 

அதன்பின்னா் 4 சடலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த பகுதியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். 

இந்நிலையில், நிலச்சரிவில் இருந்து மேலும் 3 சடலங்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானவா்களின் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 பேரை காணவில்லை. அவா்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனா். 

இந்த நிலையில் இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.