திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

இந்தியர்களை மீட்க ஆப்கன் செல்லும் மற்றொரு ஏர் இந்தியா விமானம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக தில்லியிலிருந்து ஆப்கனுக்கும் ஏர் இந்தியா விமானம் இன்று செல்கிறது.

News image

இந்தியர்களை மீட்க ஆப்கன் செல்லும் மற்றொரு ஏர் இந்தியா விமானம்

Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:41 am

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக தில்லியிலிருந்து ஆப்கனுக்கும் ஏர் இந்தியா விமானம் இன்று செல்கிறது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் போர் முடிவுக்கு வருவதாக தலிபான்கள் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இரவு 8.30 மணிக்கு தில்லியிலிருந்து புறப்படுவதாக இருந்த ஏர் இந்தியா விமானம், 8 மணிநேரம் முன்னதாக பிற்பகல் 12.30 மணிக்கே புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அவசரகால பயன்பாட்டிற்காக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கனிலிருந்து 129 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று தில்லிக்கு பத்திரமாக மீட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.