தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பெங்களூருவில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. 

News image

பெங்களூருவில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை

Updated On :16 ஆகஸ்ட் 2021, 4:21 pm

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெங்களூரு பெருநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் வகையில், டாக்டர்ஸ் யுவர்ஸ் டோர்ஸ்டெப் என்ற பெயரில் மருத்துவக் குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெங்களூருவில் உள்ள 54 வார்டுகளிலும் வீடுவீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 வீடுகளுக்குச் சென்று கரோனா பரிசோதனை செய்து முடிவுகளை அறிவித்து வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு மருத்துவர், ஒரு முதலுதவி அளிப்பவர் இருப்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.