அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களிடம் பண வசூல் செய்யும் பாஜக அரசு: பிரியங்கா காந்தி

ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி பாஜக அரசு மக்களிடம் பணம் வசூல் செய்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

DIN

ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி பாஜக அரசு மக்களிடம் பணம் வசூல் செய்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். 

சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி மற்றும் 15-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.825 இருந்த நிலையில் ஜூலை 1 -ஆம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.850 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு சரியாக ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று, மீண்டும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு எரிவாயு உருளை ரூ.875-க்கு விற்பனையாகிறது. 

ஏற்கனவே கரோனா பெருந்தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் பெட்ரோல், டீசல் விலையும் பல்வேறு நகரங்களில் ரூ. 100-யைக் கடந்துள்ளது. இத்துடன் சமையல் எரிவாயுறு உருளையின் விலையும் அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய அரசு ஜூலை 1 ஆம் தேதி, சமையல் எரிவாயு உருளை விலையை ரூ. 25 ஆக உயர்த்தியது, ஆகஸ்ட் 17 அன்று மீண்டுமஅவற்றின் விலையை ரூ.25 உயர்த்தியது. 

உஜ்வாலா யோஜனாவின் கனவைக் காட்டி, ஒவ்வொரு மாதமும் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி அதன் மூலமாக பாஜக அரசின் வசூல் திட்டம் செழித்து வருகிறது' என்று விமர்சித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.