மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வேலையின்மை பதிவு பிரசாரம்: உத்தரகண்ட் காங்கிரஸ் சார்பில் நாளை தொடக்கம்

உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் வேலையின்மை பதிவு பிரசாரம் நாளை(ஆக.20) தொடங்குகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 11:27 am

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் வேலையின்மை பதிவு பிரசாரம் நாளை(ஆக.20) தொடங்குகிறது. 

உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் இதுகுறித்து கூறுகையில், 

நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசு இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

நாளை(ஆக.20) முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, உத்தரகண்ட் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநிலத்தில் வேலையின்மை பதிவு பிரசாரம் தொடங்குகிறது. 

வேலையில்லாதவரிகளையும் இளைஞர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த பிரசாரம் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். 

இந்த பிரசாரத்தை காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், மாநிலத் தலைவர் கணேஷ் கொடியால், எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் மற்றும் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

முன்னதாக, நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்குமுன் இந்த பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கி பல்வேறு பகுதிகளில்  நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.