ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடுதழுவிய போராட்டம்: எதிர்க்கட்சிகள்

மத்திய அரசைக் கண்டித்து செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:14 pm

DIN

மத்திய அரசைக் கண்டித்து செப்.20 முதல் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக பொதுவான வியூகத்தை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது போன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று கணொளி வாயிலாக நடைபெற்றது. காங்கிரஸின் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா உள்ளிட்ட 19 கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், கரோனா தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் விரைந்து செயல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்து குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.  பள்ளிகளை திறக்கவுள்ளதால் மாணவர்கள், ஆசிரிகள், பணியாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை தர வேண்டும்.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காஷ்மீரில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.20 முதல் 30ஆம் தேதி வரை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.