/

விவசாயிகள் போராட்டம்: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்

விவசாயிகள் போராட்டம் நடத்தியதில் பஞ்சாப் ஜலந்தரில் உள்ள தேசிய நெடுங்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

News image
விவசாயிகள் போராட்டம்
Updated On :21 ஆகஸ்ட் 2021, 9:02 am

DIN

விவசாயிகள் போராட்டம் நடத்தியதில் பஞ்சாப் ஜலந்தரில் உள்ள தேசிய நெடுங்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

கரும்பு விலையை உயர்த்தக் கோரி பஞ்சாப் ஜலந்தரில் உள்ள தேசிய நெடுங்சாலையில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 54 ரயில்கள் பாதை மாற்றப்பட்டு இயக்கப்பட்டதாகவும் ஃபெரோஸ்பூர் பிரிவு ரயில்வேதுறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலுவை தொகைகளை வழங்க வேண்டும், கரும்பின் விலையை உயர்த்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் நேற்று தொடங்கினர். தங்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இருப்பினும், அவசர தேவைகளுக்காக வரும் வாகனங்களை அவர்கள் அனுமதித்துவருகின்றனர்.

ஜலந்தர் மாவட்டம் தனோவலி கிராமத்தில் உள்ள ஜலந்தர் - பக்வாரா தேசிய நெடுஞ்சாலையை மறித்து அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் காரணமாக, ஜலந்தர், அமிர்தசரஸ், பதான்கோட் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சாலையிலேயே முடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.