வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆப்கன் விவகாரம்: ஆக. 26இல் மத்திய அரசின் கூட்டத்தில் திருச்சி சிவா பங்கேற்பு

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஆகஸ்ட் 26இல் நடைபெறும் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்கள் கூட்டத்தில் திமுகவின் திருச்சி சிவா பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
திருச்சி சிவா(கோப்புப்படம்)
Updated On :24 ஆகஸ்ட் 2021, 6:22 am

DIN

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஆகஸ்ட் 26இல் நடைபெறும் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்கள் கூட்டத்தில் திமுகவின் திருச்சி சிவா பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், ஆப்கனில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களிடம் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைக்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மாநிலங்களவை அவைத் தலைவருமான திருச்சி சிவா பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.