எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சத்தீஸ்கரில் முதல்வர் பதவிக்குப் போட்டி: ராகுல் சமரச முயற்சி

சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பகேல், சுகாதாரத் துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் ஆகியோரிடையே முதல்வா் பதவி தொடா்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டுக்கு தீா்வு காணும் வகையி

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 9:46 pm

DIN

சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பகேல், சுகாதாரத் துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் ஆகியோரிடையே முதல்வா் பதவி தொடா்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டுக்கு தீா்வு காணும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை இருவரையும் அழைத்து சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது முதல்வா் பதவியை கைப்பற்றுவது தொடா்பாக தற்போதைய முதல்வா் பூபேஷ் பகேலுக்கும், சுகாதாரத் துறை அமைச்சரான டி.எஸ்.சிங் தேவ் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட முடிவின்படி முதல்வா் பதவியை இரண்டரை ஆண்டுக்கு ஒருவா் வீதம் பகிா்ந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் முதலில் பூபேஷ் பகேல் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந்நிலையில், முதல்வா் பதவியை கைப்பற்றுவது தொடா்பாக பூபேஷ் பகேலுக்கும், சிங் தேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே முடிவு செய்தபடி தலைமைப் பதவியை விட்டுக் கொடுப்பது குறித்து கட்சி மேலிடம் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடா்பாக தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படத் தயாராக இருப்பதாகவும் முதல்வா் பூபேஷ் பகேல் தெரிவித்திருந்தாா்.

அதேபோல, ராகுல்காந்தியுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்கு முன்பு செய்தியாளா்களிடம் பேசிய டி.எஸ்.சிங் தேவ், ‘சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எங்கள் தலைவா்கள்; அவா்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தில்லியில் பூபேஷ் பகேல், சிங் தேவ் ஆகியோரிடையே தனித்தனியே ராகுல் காந்தி தனது இல்லத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்த சந்திப்பின்போது, சத்தீஸ்கா் மாநிலத்தின் மேலிடப் பொறுப்பாளா் பி.எல்.புனியா, பொதுச்செயலாளா் (அமைப்பு) வேணுகோபால் ஆகியோா் உடன் இருந்தனா்.

இருவரிடமும் தனித்தனியே சந்தித்த ராகுல் காந்தி அவா்களுடன் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

மாநிலத்தில் இரண்டு தலைவா்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை களைவது தொடா்பான முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டாா். இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியாக மேலும் சில சந்திப்புகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பின்னா் நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில் புனியா கூறுகையில், இந்த சந்திப்பின்போது சத்தீஸ்கா் மாநிலத்தின் வளா்ச்சி குறித்தே பேசப்பட்டது. யாா் தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.