அமரீந்தர் தலைமையில் பஞ்சாப் தேர்தலை சந்திப்போம்: காங்கிரஸ் அறிவிப்பு

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமரீந்தர், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கிடையே அதிகார போட்டி நிலவிவந்த நிலையில், முதல்வர் அமரீந்தர் தலைமையில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

பஞ்சாப் முதல்வர் அமரீந்தரை நீக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போர்கொடி தூக்கிய நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஸ் ராவத் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

பாகிஸ்தான், காஷ்மீர் குறித்து பஞ்சாப் மாநில தலைவர் நவ்ஜோத் சிங்கின் ஆலோசகர்கள் வெளியிட்ட கருத்துக்கு அமரீந்தர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து, நான்கு அமைச்சர்கள் உள்பட 23 எம்எல்ஏக்கள் நேற்று சந்தித்து, இந்த விவகாரம் குறித்து மத்திய தலைமைக்கு கடிதம் எழுதவுள்ளோம் என தெரிவித்தனர். 

சித்துவுக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் அமைச்சர் ராஜிந்தர் பஜ்வா, சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, சரஞ்சித் சிங் சன்னி, சுக்பீந்தர் சிங் சர்க்காரியா, மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பர்கத் சிங் ஆகியோர் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவை சந்திக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com