எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

15 மாதங்களுக்குப் பிறகு ஓய்ந்த கரோனா: லுதியானா மக்கள் நிம்மதி!

பஞ்சாபில் லுதியானா மாவட்டத்தில் கடந்த 15 மாதங்களில் முதன்முறையாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

News image
கோப்புப்படம்
Updated On :25 ஆகஸ்ட் 2021, 10:12 am

DIN


பஞ்சாபில் லுதியானா மாவட்டத்தில் கடந்த 15 மாதங்களில் முதன்முறையாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் செவ்வாய்க்கிழமை 9,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஒருவருக்குக்கூட நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

15 மாதங்களுக்குப் பிறகு நோய் பாதிப்பு பதிவாகாமல் இருப்பது இதுவே முதன்முறை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

“மக்களின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமானது. கரோனா மூன்றாம் அலையைத் தவிர்க்க அரசு வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றக்கோரி கேட்டுக்கொண்டுள்ளோம்.”

லுதியானாவில் 45 லட்சம் மக்கள்தொகையில் சுமார் 18 லட்சம் பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.