கேரளத்தில் இன்று மேலும் 31,265 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று மேலும் 31,265 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளத்தில் இன்று மேலும் 31,265 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,67,497 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 31,265 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக திரிச்சூரில் 3,957, எர்ணாகுளத்தில் 3,807, கோழிக்கோட்டில் 3,292, மலப்புரத்தில் 3,199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் இன்று மேலும் 153 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 20,466ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க- மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவர் பலி
தற்போதைய நிலவரப்படி 2,04,086 பேர் கரோனா கிசிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 22,468 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,51,666ஆக உயர்ந்தள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் 5,14,031 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...