இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நாட்டில் புதிதாக 45,083 பேருக்குத் தொற்று: 460 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2021, 5:09 am

DIN


புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 460 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 45,083 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,26,95,030-ஆக உயா்ந்துள்ளது. 

நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், கேரளத்தில் மட்டும் 31,265 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 153 பேர் உயிரிழந்துள்ளனர். 

35,840 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,18,88,642 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,68,558 -ஆக உள்ளது. தேசிய அளவில் மீட்பு விகிதம் 97.53 சதவிகிதமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 1.13 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 460 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,37,830 -ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 சதவிகிதமாக உள்ளது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 63.09 கோடியாக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 51,86,42,929 பரிசோதனைகளும், சனிக்கிழமை மட்டும் 17,55,327 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி, தொற்று பாதிப்பு விகிதம் 2.57 சதவிகிதமாக உள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.