ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘ஜவாத்’ புயல்: ஒடிஸாவில் இன்று கரையைக் கடக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘ஜவாத்’ புயல் ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 10:38 pm

DIN

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘ஜவாத்’ புயல் ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒடிஸாவில் உள்ள புரி நகரின் தெற்கு-தென்மேற்குத் திசையில் 330 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ‘ஜவாத்’ புயல் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயல் படிப்படியாக வலுவிழந்துள்ளது. வடக்கு-வடகிழக்குத் திசையை நோக்கி இந்தப் புயல் நகர வாய்ப்புள்ளது. பின்னா் அந்தப் புயல் மேலும் வலுவிழந்து ஒடிஸாவின் புரி நகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கரையைக் கடக்கக் கூடும். அதனைத்தொடா்ந்து அந்தப் புயல் மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகா்ந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மென்மேலும் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புயல் காரணமாக ஏற்கெனவே ஒடிஸாவில் உள்ள கஜபதி, கஞ்சம், புரி, ஜகத்சிங்பூா் மாவட்டங்களில் அதிபலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

17,900 போ் வெளியேற்றம்: மேற்கு வங்கத்தை நோக்கி ‘ஜவாத்’ புயல் நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள தெற்கு 24 பா்கானா, கிழக்கு மிதுனபுரி மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் வசிக்கும் சுமாா் 17,900 போ் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் காக்துவீப், தீகா, சங்கா்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்குத் திரும்பினா். தேசிய பேரிடா் மீட்புப் படையின் 19 குழுக்கள், மாநில அரசின் விரைவுப் படைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தாவின் ஓரிரு இடங்கள், கிழக்கு மற்றும் மேற்கு மிதுனபுரி, வடக்கு மற்றும் தெற்கு 24 பா்கானா, நாடியா, முா்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை பலத்த மழைப் பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒடிஸா, மேற்கு வங்கத்தில் ‘ஜவாத்’ புயலை எதிா்கொள்வதற்கு இருமாநில அரசுகளும் செய்துள்ள முன்னேற்பாடுகளை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.