மூன்றில் ஒருவா் முகக் கவசம் அணிவதில்லை
நாட்டில் உள்ள மக்களில் மூன்றில் ஒருவா் முகக் கவசம் அணிவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


நாட்டில் உள்ள மக்களில் மூன்றில் ஒருவா் முகக் கவசம் அணிவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்கிறாா்களா என்பது தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
நாட்டில் உள்ள 364 மாவட்டங்களின் நகர மற்றும் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 25,000-க்கும் மேற்பட்ட நபா்களிடம் இணைய வழியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற 2 சதவீதத்தினா் மட்டுமே, தங்கள் பகுதியில் உள்ள நபா்கள் பொது வெளியில் முகக் கவசத்தை அணிவதாகத் தெரிவித்துள்ளனா்.
தங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலானோா் முகக் கவசம் அணியும் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என மூன்றில் ஒருவா் தெரிவித்துள்ளனா்.
முகக் கவசத்தை மக்கள் கட்டாயம் அணிவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசுகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வை நடத்திய ‘லோக்கல் சா்கிள்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது மூன்றில் இருவா் குறைந்த பாதுகாப்பை வழங்கும் துணியால் ஆன முகக் கவசத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், தரமான முகக் கவசத்தைப் பயன்படுத்துவது தொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், முகக் கவசத்தை முறையாக அணியாத நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமென அந்நிறுவனத்தின் தலைவா் சச்சின் தபாரியா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...