தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இந்தியா-ரஷியா இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா - ரஷியா இடையே ராணுவம் உள்ளிட்ட துறைகளில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

News image
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷொய்கு
Updated On :6 டிசம்பர் 2021, 6:46 am

DIN

இந்தியா - ரஷியா இடையே ராணுவம் உள்ளிட்ட துறைகளில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருவதை முன்னிட்டு இந்திய-ரஷியா இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

தற்போது அதில் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷொய்கு இருவரும் பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தின் படி , ரஷிய அரசிடம் 2021-31 வரை 6 .01 லட்சம் ஏகே-203 ரக துப்பாக்கிகளை வாங்கவும் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் இருநாட்டு கூட்டுத் தயாரிப்பில் ஏகே-203 ரக தானியங்கித் துப்பாக்கிகளை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.