எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

இந்தியா - ரஷிய நட்புறவு நிலையானது: புதின் உடனான ஆலோசனையில் பிரதமர் பேச்சு

இந்தியா - ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தனித்துவம் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்தது என்று அதிபர் விளாதிமீர் புதின் உடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

News image
Updated On :6 டிசம்பர் 2021, 7:26 pm IST

இந்தியா - ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தனித்துவம் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்தது என்று அதிபர் விளாதிமீர் புதின் உடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தில்லி வந்துள்ள அதிபர் விளாதிமீர் புதின் தில்லி ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளின் அரசியல் மாற்றங்களால் அடிப்படை நட்புறவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ரஷியாவுடனான இந்தியாவின் உறவு நிலைத்தன்மை வாய்ந்ததாக உள்ளது என்று கூறினார். 

மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு வளர்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கரோனா தொற்று அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்தபோதிலும் இருநாடுகளின் உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என்று கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.