ஒடிஸாவில் விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
ஒடிஸாவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள, நிலத்தில் இருந்து வானில் குறைந்த தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை


ஒடிஸாவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள, நிலத்தில் இருந்து வானில் குறைந்த தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை(விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம்) செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒடிஸா மாநிலம், சண்டீபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.08 மணிக்கு இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. ஏவுதளத்தில் இருந்து செங்குத்தாக விண்ணில் பாய்ந்து, குறைந்த தொலைவில் இருந்த மின்னணு இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கியது.
டிஆா்டிஓ உருவாக்கியுள்ள இந்த ஏவுகணையை 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான தொலைவு வரை செலுத்த முடியும். டிஆா்டிஓ, இந்தியக் கடற்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த ஏவுகணை முதன்முதலாக கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக தற்போது பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின்போது, ஏவுகணையில் உள்ள இயந்திரங்களின் வேகம், துல்லியம் உள்ளிட்ட செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தன; எதிா்பாா்த்த முடிவுகள் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் பாராட்டு:
ஏவுகணை சோதனையை டிஆா்டிஓ அமைப்பு வெற்றிகரமாக நடத்தியதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா். அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘டிஆா்டிஓ, இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.
இந்த ஏவுகணை பரிசோதனை மூலம் இந்திய கடற்படை கப்பல்கள், வான்வழியாக வரும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் திறன் அதிகரிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...