தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

விபின் ராவத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாரா?

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 டிசம்பர் 2021, 10:40 am

DIN


ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விபின் ராவத்தின் நிலை என்ன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.

விபத்துக்குள்ளான இடத்தில் 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இதுபற்றி கூறியது:

"முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தி வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து மேற்கொண்டு தகவல்களைச் சேகரிக்க முயற்சித்து வருகிறேன். முதற்கட்ட தகவல்களின்படி, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்."
 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.