ஃபாஸ்டேக் வந்த பின் சுங்கக் கட்டண வசூல் அதிகரிப்பு: மாநிலங்களவையில் தகவல்

ஃபாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நாடு முழுவதும் சுங்கக் கட்டண வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மூலம் தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஃபாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நாடு முழுவதும் சுங்கக் கட்டண வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அமைச்சரின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஃபாஸ்டேக் அறிமுகத்திற்கு பிறகு சுங்க வசூல் விவரங்கள் குறித்த கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார்.

அதில், 2016-17 நிதியாண்டு ஃபாஸ்டேக் முறை சுங்கச் சாவடிகளில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 2016-17இல் 17942.14 கோடி, 2017-18இல் 21948.13 கோடி, 2018-19இல் 24396.20 கோடி, 2019-20இல் 26850.71 கோடி, 2020-21இல் 27744.15 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிப்ரவரி 15, 2021 முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com