தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தெலங்கானாவில் இருவருக்கு ஒமைக்ரான்: குடும்பத்தினருக்கும் பாதிப்பா?

தெலங்கானாவில் முதல்முறையாக இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 டிசம்பர் 2021, 11:43 am

தெலங்கானாவில் முதல்முறையாக இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

மூன்றாவதாக 7 வயது சிறுவனுக்கும் ஒமைக்ரான் இருப்பது தெரியவந்தது. ஆனால் அச்சிறுவன் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவிலிருந்து ஹைதராபாத் விமான நிலையம் வந்தவர்களை பரிசோதனை செய்ததில், இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் 24 வயதுடைய பெண் கென்யா நாட்டிலிருந்து வந்தவர் என்றும், 23 வயதுடைய இளைஞர் சோமாலியாவைச் சேர்ந்தவர் எனவும் தெலங்கானா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் டிசம்பர் 12-ஆம் தேதி ஹைதராபாத் வந்தடைந்தனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இருவருடனும் தொடர்பில் இருந்தவர்களையும் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இருநாள்களாக குடும்பத்தினருடன் தொற்று பாதித்தவர்கள் இருந்துள்ளனர். இதனால் அவர்களுக்கான முடிவுகள் வந்த பிறகு தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவதாக ஹைதராபாத் விமான நிலையம் வந்திறங்கிய 7 வயது சிறுவனுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்மாநிலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.