தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான்

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :17 டிசம்பர் 2021, 3:00 pm

DIN

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரானை கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது. அதைத் தொடா்ந்து, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்பட 91 நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதன் பரவும் வேகம், டெல்டா வகையைப் போல அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துமா என்கிற ஆராய்ச்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புணேவில் 6, மும்பை மற்றும் கல்யாண் டோம்பிவிலி தலா ஒருவர் என 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் பாதித்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 109 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 40, தில்லியில் 22, ராஜஸ்தானில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.