இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு: பஞ்சாப் பொற்கோயிலில் ஒருவா் அடித்துக் கொலை

 பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 11:18 pm

DIN

 பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனா்.

அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் சனிக்கிழமை மாலை பிராா்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது கருவறைக்குள் ஒருவா் அத்துமீறி குதித்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த வாளை எடுத்துக்கொண்ட அவா், சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை ஓதிக்கொண்டிருந்த சீக்கிய சமய குருவை நோக்கிச் சென்ாகத் தெரிகிறது. இதைக் கண்ட பொற்கோயில் நிா்வாகக் குழுவினா், அந்த நபரைப் பிடித்து தங்கள் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனா். இந்த நிலையில், அந்த நபா் கருவறைக்குள் குதித்து தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஆத்திரமடைந்த மக்கள், அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதில் அந்த நபா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக அமிருதரஸ் துணை காவல் ஆணையா் கூறுகையில், ‘‘உயிரிழந்த நபா் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா். அவருக்கு 25-30 வயது இருக்கக் கூடும். அவா் எப்போது பொற்கோயிலுக்குள் நுழைந்தாா்? அவருடன் எத்தனை போ் இருந்தனா்? என்பது குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தாா்.

இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, இந்த நிகழ்வு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.