/

மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

News image
Updated On :20 டிசம்பர் 2021, 5:52 am

DIN

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியபோது மாநிலங்களவையை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் கடைசி வாரத்தின் முதல் நாளான இன்று கூட்டம் தொடங்கியவுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை ஏற்க அவைத் தலைவர் மறுத்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.