ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

குஜராத்தில் அதிர்ச்சி: மனைவியின் பெயரை நாய்க்கு வைத்த பெண்ணுக்கு தீ வைத்த நபர்

தனது மனைவியின் பெயரை, நாய்க்கு வைத்த பக்கத்துவீட்டுப் பெண் மீது, கணவர் தீவைத்து எரித்ததில், அப்பெண் படுகாயமடைந்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :22 டிசம்பர் 2021, 8:12 am

DIN


பாவ்நகர்: தனது மனைவியின் பெயரை, நாய்க்கு வைத்த பக்கத்துவீட்டுப் பெண் மீது, கணவர் தீவைத்து எரித்ததில், அப்பெண் படுகாயமடைந்தார்.

குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்த நீத்தாபென் (35), தனது வீட்டு செல்ல நாய்க்கு சோனு என்று பெயர் வைத்துள்ளார். இது, அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த பர்வாத் மனைவியின் பெயர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை, நீத்தாபென்னின் கணவரும் பிள்ளைகளம் வெளியில் சென்றிருந்த போது, பர்வாத் மற்றும் ஐந்து பேர் நீத்தாபென் வீட்டுக்கு வந்து, தனது மனைவியின் பெயரை, நாய்க்கு வைத்ததைக் கண்டித்துள்ளனர்.

அப்போது, வாக்குவாம் ஏற்பட்டு, அந்த கும்பல், நீத்தாபென் மீது மண்ணென்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். நீத்தாபென்னின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரும், அவரது கணவரும் தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இரு குடும்பத்துக்கும் ஏற்கனவே தண்ணீர் வழங்குவதில் சண்டை இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.