எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நாட்டில் புதிதாக 7,495 பேருக்கு கரோனா; 434 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,495 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
நாட்டில் புதிதாக 7,495 பேருக்கு கரோனா
Updated On :23 டிசம்பர் 2021, 4:22 am

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,495 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 66.86 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 78,291ஆக உள்ளது.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 6,960 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 434 பேர் பலியானதையடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,78,759ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் இதுவரை 139.70 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.