பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமரீந்தர் சிங், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் கட்சியில் நவ்ஜோத் சிங் சித்துவை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அமரீந்தர் சிங் அறிவித்தார்.
மேலும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியையும் தொடங்கியுள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, பாஜக தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பாஜகவுடன் இணைந்து ஆட்சியைப் பிடிப்போம் என்று அமரீந்தர் சிங் கூறினார்.
இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார் அமரீந்தர் சிங். இந்த சந்திப்பின்போது பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பஞ்சாபின் எஸ்.ஏ.டி கட்சியினரும் இருந்தனர். பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ், எஸ்.ஏ.டி. ஆகிய மூன்று கட்சிகளுக்கான தேர்தல் இட ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: காட்பாடி!

விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்

தொகுதி அறிமுகம்: வேலூா்!
அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

