மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா: புதிதாக 13,154 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,154 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 268 பேர் உயிரிழந்தனர்.

News image
இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா
Updated On :30 டிசம்பர் 2021, 4:17 am

DIN


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,154 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 268 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொவைட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிதாக 13,154 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.48 கோடியாக அதிகரித்து வருகிறது. புதிதாக 268 பேர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 80,860-ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 7,486 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 82,402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் குணமடைந்தோர் விகிதம் 98.38% ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.