எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தில்லி: கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 46% பேருக்கு ஒமைக்ரான்

தில்லியில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 46% பேருக்கு ஒமைக்ரான்
Updated On :30 டிசம்பர் 2021, 5:35 am

DIN

தில்லியில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 961 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தில்லியில் 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் இன்று வெளியிட்ட தகவலில்,

தில்லியில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், 46 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.