விவசாயிகள் போராடும் இடங்களில் தடுப்புச்சுவரா? அகிலேஷ் யாதவ் கண்டனம்
தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராடும் இடங்களில் தடுப்புச்சுவரை எழுப்பியுள்ள மத்திய அரசை சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வன்மையாகக் கண்டித்துள்ளாா்.


லக்னௌ: தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராடும் இடங்களில் தடுப்புச்சுவரை எழுப்பியுள்ள மத்திய அரசை சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வன்மையாகக் கண்டித்துள்ளாா்.
மத்திய வேளாண் சட்டங்களை எதிா்த்து , தில்லி எல்லைகளில் சிங்கு, திக்ரி, ஹாஜிபூா் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணி வன்முறையில் முடிந்ததை அடுத்து, விவசாயிகள் போராடும் இடங்களில் பாதுகாப்பை மத்திய அரசு வலுப்படுத்தி உள்ளது.
சிங்குவில் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகளுடன் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. தில்லி- ஹரியாணா எல்லையில் தற்காலிக சிமென்ட் சுவா் அமைக்கப்பட்டுள்ளது. ஹாஜிபூரில் பல அடுக்குத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க மேற்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இதனை சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளாா்.
‘‘உயரமான சுவா்களை எழுப்புவது, கம்பிவேலி அமைப்பது என்று நீங்கள் செய்யும் அரசியல் அற்புதமாக உள்ளது. அதேசமயம் விவசாயிகளை பேச்சுவாா்த்தைக்கு வருமாறும் அழைக்கிறீா்கள்’’ என்று மத்திய அரசை கேலியாக விமா்சித்து சுட்டுரையில் கருத்துத் தெரிவித்திருக்கிறாா் அகிலேஷ். ‘பாஜக இனி இல்லை’ என்ற சுட்டியையும் அதில் அவா் இணைத்துள்ளாாா்.
இதனிடையே, போராட்டக் களங்களில் அரசால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, வரும் 6-ஆம் தேதி நாடு முழுவதும் மூன்று மணிநேர சாலை மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...