தேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

நாட்டில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 1,07,77,284 ஆக உயர்ந்துள்ளது. 

News image

நாட்டில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா பாதிப்பு

Updated On :3 பிப்ரவரி 2021, 4:59 am

PTI

புது தில்லி: நாட்டில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 1,07,77,284 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 11,039 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,07,77,284-ஆக அதிகரித்தது.

கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,62,631-ஆக அதிகரித்தது.

கரோனா தொற்றுக்கு மேலும் 110 போ் உயிரிழந்தனா். 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் இன்று 110 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,596-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 15-ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் உள்ளது.

நாடு முழுவதும் 1,60,057 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதாவது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 1.49 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19.84 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 7,21,121 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.