தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான காஜிப்பூர் சாலையில் காவல்துறையினர் பதித்து வைத்திருந்த ஆணிகள் அகற்றப்பட்டன.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஆணிகளை விவசாயிகளே தங்களிடமிருந்த பொருள்களைக் கொண்டு அகற்றினர்.
குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து தில்லி - உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர், தில்லி - ஹரியாணா எல்லையான சிங்கு, திக்ரி ஆகிய எல்லைகளிலிருந்து விவசாயிகள் வெளியேற வலியுறுத்தி பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளை அப்புறப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் காஜிப்பூர் எல்லையில் விவசாயிகள் மீண்டும் அதிக அளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில் சாலைகளில் உயர்ந்த தடுப்புகளை அமைத்தும், ஆணி, கம்பி உள்ளிட்டவற்றை சாலையில் புதைத்தும் வைத்திருந்தனர்.
இதனிடையே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (பிப். 4) காஜிப்பூர் எல்லையில் விவசாயிகளை சந்திக்கச் சென்றனர். அப்போது அவர்கள் எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
எனினும் அவர்கள் விவசாயிகளை சந்திப்பதில் உறுதியாக இருந்ததால், சாலையில் இருந்த ஆணி உள்ளிட்ட கம்பிகளை விவசாயிகளே தங்களிடமிருந்த பொருள்களைக் கொண்டு அகற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அவளை அதிகம் மிஸ் செய்தேன்.. விஜய் தேவரகொண்டா உருக்கம்!

அசாம் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி.!

79 நாடுகளுக்கு 99 முறை பயணங்கள்! 19 நாடாளுமன்றங்களில் உரை! பிரதமர் மோடி சாதனை!

பிரதமர் வருகை: திருப்பரங்குன்றம் கோயிலில் சோதனைக்குப் பிறகே மக்கள் அனுமதி!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

