விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபடவுள்ளதையொட்டி தில்லி எல்லைகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 'சக்கா ஜாம்' என்ற பெயரில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று (பிப்ரவரி 6) ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் தலைநகா் தில்லி தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் நடைபெறும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
எனினும் விவசாயிகளின் சாலை மறியலையொட்டி தில்லி சாலைகளில் அதிக அளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் சக்கா ஜாம் அறிவிப்பால் சாலைகள் மூடப்பட்டதால், பொதுமக்கள் 8 முதல் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டனர். வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
இந்நிலையில் தில்லி திக்ரி எல்லையில் டிரோன் மூலம் விவசாயிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தில்லியில் சாலைமறியல் நடைபெறாது என்று விவசாயிகள் தெரிவித்திருந்தாலும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தில்லி எல்லையினுள் விவசாயிகள் நுழையாத வகையில் தில்லி எல்லைகளில் தடுப்புகளுக்கு மத்தியில் கான்கிரீட் தடுப்பு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அவளை அதிகம் மிஸ் செய்தேன்.. விஜய் தேவரகொண்டா உருக்கம்!

அசாம் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி.!

79 நாடுகளுக்கு 99 முறை பயணங்கள்! 19 நாடாளுமன்றங்களில் உரை! பிரதமர் மோடி சாதனை!

பிரதமர் வருகை: திருப்பரங்குன்றம் கோயிலில் சோதனைக்குப் பிறகே மக்கள் அனுமதி!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

